Images
  • no power
    (படம்: Twitter@juarezjuanp)

அமெரிக்கா: நியூயார்க் நகரில் மின்தடை

அமெரிக்காவின் முக்கிய நகரங்கமான நியூயார்க்கில்  பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. மென்ஹேட்டன் (Manhattan) வட்டாரத்தின் பெரும்பகுதி அந்த மின் தடையால் பாதிக்கப்பட்டது.

சுரங்க ரயில் பாதைகள் சில இருளில் மூழ்கடிப்பட்டுள்ளன.

பெரிய பகுதிகளில் அமைந்துள்ள சாலை விளக்குகள் எல்லாம் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

திரை அரங்கங்களுக்குச் சென்றவர்கள் எல்லாம் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் மின்தூக்கிகளில் பலர் சிக்கிக்கொண்டுள்ளனர் என்றும் சொல்லப்பட்டது.

மின்தடைக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் மீண்டும் மின் சேவையை இயங்க ஆக அனைத்தையும் உள்ளூர் அதிகாரிகள் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Top