Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூயார்க் மின் தடை: சீரமைக்கப்படுவதில் தீவிரம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மிகப் பெரிய அளவிலான மின் தடையில் சம்பந்தப்பட்டிருந்த 6 கட்டமைப்புகளில் 2இல் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
நியூயார்க் மின் தடை: சீரமைக்கப்படுவதில் தீவிரம்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏற்பட்ட மிகப் பெரிய அளவிலான மின் தடையில் சம்பந்தப்பட்டிருந்த 6 கட்டமைப்புகளில் 2இல் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளது.

அனைத்தையும் சீரமைத்து வழக்கநிலைக்குக் கொண்டுவரும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

மின்-மாற்றியில் ஏற்பட்ட தீயே மின்தடைக்குக் காரணமாயிருந்ததாக நியூயார்க் நகரத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.

மென்ஹேட்டன் (Manhattan) வட்டாரத்தின் பெரும்பகுதி அந்த மின் தடையால் பாதிக்கப்பட்டது.

சுமார் 44ஆயிரம் பேர் மின்சாரமின்றித் தவிக்க நேரிட்டது.

1.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டது மென்ஹேட்டன் வட்டாரம். அங்குதான் வால் ஸ்டிரீட் (Wall Street) நிதி நடுவம் அமைந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்குள் மின்சேவை முழுவதையும் வழக்கநிலைக்குக் கொண்டுவர அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்