Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜெனொவா மேம்பாலச் சாலை துயரச் சம்பவம் - இத்தாலிக்கு இரங்கல் கடிதங்களை அனுப்பிய சிங்கப்பூர்த் தலைவர்கள்

ஜெனொவாவின் மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததற்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபும் பிரதமர் லீ சியென் லூங்கும் இத்தாலயத் தலைவர்கள் இரங்கல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஜெனொவா மேம்பாலச் சாலை துயரச் சம்பவம் - இத்தாலிக்கு இரங்கல் கடிதங்களை அனுப்பிய சிங்கப்பூர்த் தலைவர்கள்

(படம்: Valery HACHE/AFP)

இத்தாலி: ஜெனொவா (Genoa) நகரின் மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததற்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோபும் பிரதமர் லீ சியென் லூங்கும் இத்தாலியத் தலைவர்களுக்கு இரங்கல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

சம்பவத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 39க்கு அதிகரித்துள்ளது. ஆனால், எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதில் சிங்கப்பூரர் எவரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இத்தாலிய அதிபர் செர்ஜியோ மாட்டரெல்லாவுக்கு (Sergio Mattarella) அனுப்பிய கடிதத்தில், பாலம் இடிந்து விழுந்ததில் பலர் மாண்டது குறித்தும் காயமடைந்தது பற்றியும் வருத்தமடைந்ததாக அதிபர் ஹலிமா தெரிவித்தார்.

காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்தாலியப் பிரதமர் ஜியூசெப்பெ கோண்டிக்கு (Giuseppe Conte) எழுதிய கடிதத்தில் பிரதமர் லீ தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

இந்தத் துயரச் சம்பவத்திலிருந்து இத்தாலி மீண்டுவரும் என்பதில் தமக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் சொன்னார்.

இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தார் குறித்தே தங்கள் எண்ணங்கள் இருப்பதாகத் திரு லீ கூறினார்.

இவ்வேளையில் ஜெனோவாவில் உள்ள சிங்கப்பூரர்கள் நலமாக இருப்பதைக் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் தெரியப்படுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.

உதவி தேவைப்படுவோர் வெளியுறவு அமைச்சு அலுவலகத்தின் 24 மணி நேரச் சேவையைத் தொடர்புகொள்ளலாம்.

தொலைபேசி எண்: +65 6379 8800/8855 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்