Images
  • biden (4)
    கோப்புப் படம்: Reuters

செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்த மூன்று இடங்களுக்கும் செல்லவிருக்கும் அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடந்த மூன்று இடங்களுக்கும் செல்லவிருக்கிறார்.

முன்னைய அமெரிக்க அதிபர்களான திரு. ஜார்ஜ் W. புஷ் (George W Bush), திரு. பராக் ஒபாமா (Barack Obama)ஆகியோரும் அவருடன் சேர்ந்துகொள்வார்.

முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப், திரு. பைடன் புறப்பட்டவுடன் அந்த இடங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத்தை உறைய வைத்த நாள் செப்டம்பர் 11.

அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சுமார் 3,000 பேர் மாண்டனர்.

அந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு
ஒசாமா பின் லாடனும் அல்கயீடா அமைப்பினரும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது.

பாகிஸ்தானில் மறைந்திருந்த ஒசாமா பின் லாடனை 2011இல் அமெரிக்கப் படையினர் கொன்றனர்.

செப்டம்பர் 11 தாக்குதலை எதிர்கொண்ட நியூயார்க், வாஷிங்டன் , பென்சில்வேனியா ஆகியவற்றில் ஆயிரக்கணக்கானோர் கூடி மாண்டோருக்குத் தங்கள் அஞ்சலியைச் செலுத்தவிருக்கின்றனர். 

Top