Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'என்னை இளவரசர் ஹேரி என்று அழைக்காதீர்கள்'

'என்னை இளவரசர் ஹேரி என்று அழைக்காதீர்கள்'

வாசிப்புநேரம் -
'என்னை இளவரசர் ஹேரி என்று அழைக்காதீர்கள்'

(படம்: Reuters/Clodagh Kilcoyne)

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹேரி, தம்மை இளவரசர் என்ற பட்டத்தைக் கூறி அழைக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதன் தொடர்பில் CNN செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்காட்லந்தில் சுற்றுலாத்துறையைச் சேர்ந்தோர் கலந்துகொண்ட கருத்தரங்கில் பேசியபோது ஹேரி, அவ்வாறு தெரிவித்தார்.

ஹேரி தமது பயணத் திட்டங்கள் குறித்துக் கருத்தரங்கில் அறிவித்தார்.

ஹேரியும் அவரது மனைவி மேகனும் பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து விலகி, அதன் பட்டங்களை விடுத்து, தனி வாழ்க்கைத் தொடங்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

இருப்பினும், அரச குடும்பத்தின் மதிப்புக்குரிய பட்டங்களை அவர்கள் அடுத்த மாத இறுதி வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்