Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இருக்கை வார் அணியாமல் வாகனம் ஓட்டியது குறித்து பிரிட்டிஷ் இளவரசருக்குக் காவல்துறை அறிவுரை

எலிசெபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப், பாதுகாப்பு இருக்கைவார் அணியாமல் காரை ஓட்டிச்சென்றதன் தொடர்பில் காவல்துறை அவருக்கு அறிவுரை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இருக்கை வார் அணியாமல் வாகனம் ஓட்டியது குறித்து பிரிட்டிஷ் இளவரசருக்குக் காவல்துறை அறிவுரை

(படம்: Alastair Grant/POOL/AFP)

எலிசெபெத் அரசியாரின் கணவர் இளவரசர் ஃபிலிப், பாதுகாப்பு இருக்கைவார் அணியாமல் காரை ஓட்டிச்சென்றதன் தொடர்பில் காவல்துறை அவருக்கு அறிவுரை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்களுக்கு முன்னர் இளவரசர் ஓட்டிச் சென்ற Land Rover ரகக் கார் விபத்துக்குள்ளானது. ஆனால், அவர் காயங்கள் ஏதுமின்றி தப்பித்தார்.

கார் விபத்தில் சேதமடைந்ததால் மாற்று வாகனத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தார் 97 வயது இளவரசர் ஃபிலிப்.

இருக்கைவார் அணியாமல் அந்த வாகனத்தை அவர் ஓட்டிக்கொண்டிருக்கும் படங்கள் பிரிட்டன் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் சாண்டிரிங்ஹாம் (Sandringham) பகுதியில் உள்ள அவரது மனைவியின் தனியார் வீட்டுக்கு அருகே இளவரசர் காரை ஓட்டுவதை அந்தப் படங்கள் சித்திரிக்கின்றன.

படங்கள் குறித்து அறிந்திருப்பதாகவும், இளவரசருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டதாகவும் காவல்துறைப் பேச்சாளர் கூறினார்.

சென்ற வியாழக்கிழமை நடந்த விபத்து தொடர்பிலும் விசாரணை இடம்பெறுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்