Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பெயரைப் பொதுக் கொள்கைப் பள்ளிப் பட்டியலிலிருந்து நீக்கிய Princeton பல்கலைக்கழகம்

அமெரிக்காவின் 28ஆவது அதிபர் வுட்ரோ வில்சன் இனவாதி  என்பதால், அவருடைய பெயரைத் தனது பொதுக் கொள்கைப் பள்ளிப் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டது  Princeton பல்கலைக்கழகம். 

வாசிப்புநேரம் -
அமெரிக்க முன்னாள் அதிபர் பெயரைப் பொதுக் கொள்கைப் பள்ளிப் பட்டியலிலிருந்து நீக்கிய Princeton பல்கலைக்கழகம்

படம்: AFP/WILLIAM THOMAS CAIN

அமெரிக்காவின் 28ஆவது அதிபர் வுட்ரோ வில்சன் இனவாதி என்பதால், அவருடைய பெயரைத் தனது பொதுக் கொள்கைப் பள்ளிப் பட்டியலிலிருந்து அகற்றிவிட்டது Princeton பல்கலைக்கழகம்.

முன்னாள் அதிபர் வில்சனின் இனவாத எண்ணமும், கொள்கைகளும் பள்ளியைப் பிரதிநிதிப்பதற்கு அவரைத் தகுதியில்லாதவராக்கி விட்டன

என்று பல்கலைக்கழக அறங்காவலர் குழு குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், கல்விமான்கள் ஆகியோர் இனவாதத்தை உறுதியாக எதிர்க்க வேண்டும் என்றும் Princeton பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டது.

1913-இலிருந்து 1921-வரை அதிபராக இருந்த வில்சன், இனவாதக் கொள்கைகள் மூலம், அரசாங்க அமைப்புகளில் இனவாத பகுப்பு முறைக்குப் ஆதரவாகச் செயல்பட்டவர்.

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரியின் வன்செயலால் கொலையுண்ட ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்டின் மரணத்தை அடுத்து, இனவாதத்துக்கு எதிராகப் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

இனவாதக் கருத்துகளைப் பரப்பாமல் தடுக்கப் பள்ளிகளும் நிறுவனங்களும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்