Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யா: எதிர்த்தரப்புத் தலைவர் நாவல்னிக்கு ஆதரவாகப் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்டம்

ரஷ்ய எதிர்த்தரப்புத் தலைவர் அலெக்சி நாவல்னிக்கு (Alexei Navalny) ஆதரவாக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) திரண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -

ரஷ்ய எதிர்த்தரப்புத் தலைவர் அலெக்சி நாவல்னிக்கு (Alexei Navalny) ஆதரவாக, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் மாஸ்கோவில் (Moscow) திரண்டுள்ளனர்.

அவருக்கு முறையான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படவேண்டுமென அவர்கள் கோரினர்.

"சுதந்திரம்", அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) 'ஒரு திருடர்' என முழக்கமிட்டவாறே அவர்கள் ஆர்ப்பரித்தனர்.

காவல்துறையின் எச்சரிக்கைகளை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரைச் சுற்றி அணிவகுத்துச் சென்றனர்.

மேலும் பெரிய அளவில் காவல்துறையினர் அங்கு பணியமர்த்தப்பட்டனர்.

அதிபர் புட்டினின் வருடாந்திர நாட்டு நடப்பு உரைக்குப் பிறகு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.

மாஸ்கோவில் மட்டும் 6,000 பேர் கூடியிருந்தனர்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (Saint Petersburg) நகரில் சுமார் 4,500 பேர் திரண்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

-AFP/ec 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்