Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிறந்த செய்தியாளர் விருதைக் கைப்பற்றிய ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்த ஆண்டு 2 புலிட்ஸர் விருதுகளை வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -
சிறந்த செய்தியாளர் விருதைக் கைப்பற்றிய ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவர்

படம்: AFP

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்த ஆண்டு 2 புலிட்ஸர் விருதுகளை வென்றுள்ளது.

மியன்மாரில் பௌத்த சமயத்தைச் சேர்ந்த கிராமவாசிகளும், பாதுகாப்புப் படையினரும் சேர்ந்து ரொஹிஞ்சா முஸ்லிம்கள் 10 பேரைப் படுகொலை செய்த சம்பவத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது....

அமெரிக்காவில் அடைக்கலம் நாடும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தோரின் படங்களை வெளியிட்டது.... ஆகியவற்றுக்காக அந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அமெரிக்கப் பத்திரிகைத்துறையில் ஆக உயர்வானதாகக் கருதப்படும் புலிட்ஸர் விருதளிப்பு விழா நேற்று இடம்பெற்றது.

ராய்ட்டர்ஸ் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக, 2 புலிட்ஸர் விருதுகளை வென்றுள்ளது.

2008ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 7 விருதுகளை அது கைப்பற்றியுள்ளது.

இந்த ஆண்டு கௌரவிக்கப்பட்டோரில் இருவர், மியன்மாரில் கிட்டத்தட்ட 500 நாள் சிறையிலடைக்கப்பட்டவர்கள்.

மற்ற பிரிவுகளில், அமெரிக்காவில் நடந்த பெரிய அளவிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான விசாரணை ஆகியவை குறித்த செய்திகள் முக்கியத்துவம் பெற்றன.

இந்த ஆண்டு 2 புலிட்ஸர் விருது பெற்றுக்கொண்ட மேலும் இரு செய்தி நிறுவனங்கள் New York Times, Washington Post ஆகியவை.

ராய்ட்டர்ஸும், AP செய்தி நிறுவனமும், அனைத்துலகச் செய்திகளுக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டன. ஏமனில் நடந்த கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததற்காக AP செய்தி நிறுவனத்துக்கு விருது கிடைத்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்