Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாலிவுட் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த 2 ஊடகங்களுக்கு Pulitzer பரிசு

ஹாலிவுடில் நடத்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த, New York Times நாளிதழ், The New Yorker சஞ்சிகை ஆகியவற்றுக்குப் பொதுச் சேவைக்கான, Pulitzer பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஹாலிவுடில் நடத்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த, New York Times நாளிதழ், The New Yorker சஞ்சிகை ஆகியவற்றுக்குப் பொதுச் சேவைக்கான, Pulitzer பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டெய்ன் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது அதன் மூலம் உலகிற்குத் தெரியவந்தது.

கடந்த அக்டோபர் மாதம், அது பற்றி தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் அதிகமான பெண்கள், வெய்ன்ஸ்டெய்ன், தங்களைத் தவறாக நடத்தியதாக வெளிப்படையாகத் தெரிவிக்க முன்வந்தனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் #MeToo இயக்கமும் பிரபலமடைந்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பில், செல்வாக்கு மிகுந்த பல ஆண்கள் தங்கள் வேலைகளையும் நற்பெயரையும் இழக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்