Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செய்த தவற்றை மகள் வாழ்நாள் முழுதும் மீண்டும் செய்யாமல் இருக்க பெற்றோரின் வித்தியாசமான தண்டனை

பிள்ளைகள் தவறு செய்யும்போது, பெற்றோர் அவர்களைத் திட்டுவார்கள், அல்லது ஏதேனும் வழியில் தண்டிப்பார்கள்.

வாசிப்புநேரம் -
செய்த தவற்றை மகள் வாழ்நாள் முழுதும் மீண்டும் செய்யாமல் இருக்க பெற்றோரின் வித்தியாசமான தண்டனை

(படம்: madelynn.ellagrace/Instagram)

பிள்ளைகள் தவறு செய்யும்போது, பெற்றோர் அவர்களைத் திட்டுவார்கள், அல்லது ஏதேனும் வழியில் தண்டிப்பார்கள்.

ஆனால், செய்த தவற்றை மகள் வாழ்நாள் முழுவதும் மீண்டும் செய்யாமல் இருக்க அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலத்தைச் சேர்ந்த பெற்றோர் வித்தியாசமான முறையைக் கையாண்டனர்.

15 வயது மேடலின் ஆண்களை வீட்டுக்குள் அழைத்து வரக்கூடாது என்ற நெறிமுறை இருந்தது. பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களை அழைக்க முயன்றார் அவர்.

அதற்குத் தண்டனையாக, பெற்றோர் மேடலினுக்கு இரண்டு தெரிவுகளைக் கொடுத்தனர்.

மேடலின் கைபேசியை ஒரு மாதத்திற்குப் பயன்படுத்த முடியாமல் இருப்பது. அல்லது, அவரின் சமூக ஊடகக் கணக்குகள், இரு வாரங்களுக்குப் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருப்பது.

இரண்டாவது தெரிவைத் தேர்ந்தெடுத்த மேடலின், பின்னர் வருந்தினார்.

மகளின் சமூக ஊடகக் கணக்குகளை ஒரு மாத காலத்திற்குப் பயன்படுத்தி, பல்வேறு படங்களையும் காணொளிகளையும் பதிவேற்றம் செய்தனர்.

View this post on Instagram

Felt cute. Might delete later.

A post shared by madelynn�� (@madelynn.ellagrace) on

அவர்களின் செயல் பெற்றோருக்குப் பல ரசிகர்களைச் சேர்த்துள்ளது. 

இது மகளுக்கு மறக்க முடியாத பாடமாக அமைந்துவிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்