Images
  • puppy
    (படம்: Pixabay)

கால் வளைந்த நாய்க்குட்டி மீண்டும் நடக்கும் ஆச்சரியம்

கால் வளைந்த நாய்க்குட்டி மீண்டும் நடக்கக் கற்றுக்கொண்டு வருகிறது, மருத்துவர்களின் உதவியுடன்.

அமெரிக்காவின் ஆக்லஹோமா (Oklahoma) மாநிலப் பல்கலைக்கழக விலங்குநல மருத்துவமனையில் அதற்குச் சிகிச்சை அளிக்கப்பட்டதாக Malay Mail செய்தி நிறுவனம் கூறியது.

சிக்கி (Siggi) என்ற அந்த 13 வார நாய்க்குட்டியின் வளைந்த முன் பாதங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.

சிக்கியின் முழங்காலில் பிரச்சினை இருந்ததாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர் எரிக் கிலாரி (Erik Clary) தெரிவித்தார்.

சிக்கியின் முழங்கால், மூட்டிலிருந்து முன்கூட்டியே வெளியாகிவிட்டதால், அதனால் நடக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

அறுவை சிகிச்சைக்குப் பின், சிக்கியின் எலும்புகள் குணமடைந்துவிட்டதாக Malay Mail கூறியது.

தற்போது, மற்ற நாய்க்குட்டிகளைப் போல், எல்லாச் சேட்டைகளையும் செய்கிறதாம் சிக்கி.

Top