Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்ய அதிபர் புட்டினைப் போல் இன்னொருவர்....உண்மையா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொது இடங்களில் தோன்றுவதற்குத், தம்மைப் போல் மற்றொருவரைத் தயார் செய்யத் திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ரஷ்ய அதிபர் புட்டினைப் போல் இன்னொருவர்....உண்மையா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். படம்: AFP/Michael Klimentyev

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பொது இடங்களில் தோன்றுவதற்குத், தம்மைப் போல் மற்றொருவரைத் தயார் செய்யத் திட்டமிட்டிருந்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்தத திட்டத்தைத் தாம் ரத்து செய்துவிட்டதாகவும், தாமே அசல் புடின் என்றும் அவர் தெரிவித்தார்.

அதிபர் புடின் குறித்து இணையத்தில் பல வதந்திகள் உண்டு. அவர் ஆள்மாறாட்டம் செய்கிறார், தம்மைப் போலவே மற்றொருவரைப் பொது இடங்களுக்கு அனுப்புகிறார் போன்றவை அவற்றுள் சில.

அவை முற்றிலும் ஆதாரமற்றவை அல்ல என்பதைத் தற்போது திரு புடின் வெளியிட்ட கருத்துகள் புலப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

TASS அரசாங்க செய்தி அமைப்பு திரு புடின் பதவியேற்ற 20 ஆண்டு நிறைவை ஒட்டி, நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அதில், தம்மைப் போல் இன்னொருவரைப் பயன்படுத்தியதில்லை என்று கூறிய திரு புடின், ஆனால் அது குறித்த யோசனை இருந்ததை ஒப்புக்கொண்டார்.

2015ஆம் ஆண்டு பொதுமக்கள் பார்வையிலிருந்து திரு புடின் 10 நாள்கள் காணமல்போனார்.

அவர் தந்தையாகிவிட்டார், அவருக்கு உடல்நிலை சரியில்லை, அவர் அறுவை சிகிச்சைக்குச் சென்றிருக்கிறார், இறந்துவிட்டார் இப்படிப் பல வதந்திகள் அப்போது பரப்பப்பட்டன.

மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வந்த திரு புடின், "வதந்திகள் இல்லாமல் சுவாரஸ்யம் இல்லை." என்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்