Images
  • Putin in sg (1)
    (படம்: Dmitri Lovetsky/Pool via REUTERS)

ரஷ்யா: அதிபர் புட்டின் மேலும் 2 தவணைக்காலத்துக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் சட்டத்தில் கையெழுத்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), மேலும் இரண்டு தவணைக்காலத்துக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த குறைகூறலுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

69 வயதாகும் திரு. புட்டினின் தற்போதைய நான்காவது தவணைக் காலம், 2024ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ளது.

ஆனால், இன்று கையெழுத்தான சட்டப்படி, அவர் மீண்டும் இரண்டு தவணைக்கு அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியும்.

அந்தத் தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றால் 2036ஆம் ஆண்டுவரை அவரே ரஷ்ய அதிபராகப் பொறுப்புவகிப்பார்.

அதிபர் பதவியின் தவணைக்காலம், ரஷ்யாவில் ஆறு ஆண்டுகள்.

ரஷ்ய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்துச் சென்ற ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

புதிய சட்டத் திருத்தம், அந்த வாக்கெடுப்பின் முடிவை அதிகாரபூர்வமாக்கியுள்ளது.

2008இல் திரு. புட்டின், அப்போதைய பிரதமர் டிமெட்ரி மெத்வதேவுடன் (Dmitry Medvedev) பதவியைப் பரிமாறிக்கொண்டு ஆட்சியில் நீடித்தார்.

பின்னர் 2012-இல் அவர் மீண்டும் அதிபர் பதவியைக் கைப்பற்றினார்.

-CNN 

Top