Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தனிமையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஷ்ய அதிபர் புட்டின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), முதல் முறை COVID-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தனிமையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஷ்ய அதிபர் புட்டின்

(படம்: Dmitri Lovetsky/Pool)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin), முதல் முறை COVID-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மற்ற உலகத் தலைவர்கள் போல் பொது மக்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் போட்டுக்கொள்ளாமல், 68 வயது திரு. புட்டின் தனிமையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அவர் எந்த நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும், ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட 3 தடுப்பூசிகளில் ஒன்றைத்தான் அவர் போட்டுக்கொண்டார் என்று ரஷ்ய அரசாங்கப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் (Dmitry Peskov) கூறினார்.

திரு. புட்டின் நலமாக இருப்பதாகவும், நாளை முழுவதும் அவருக்கு வேலை இருப்பதாகவும் திரு. பெஸ்கொவ் சொன்னார்.

கேமராக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் திரு. புட்டின் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் 4.4 மில்லியனுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

சுமார் 95,000 பேர் மாண்டனர்.

இருப்பினும், அங்கு தடுப்பூசி போடும் பணி, மற்ற நாடுகளைக் காட்டிலும் மெதுவாகவே உள்ளது.

அதற்குத் தடுப்பூசி மீதான சந்தேகம் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்