Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவில் COVID-19 தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் : அதிபர் புட்டின்

ரஷ்யாவில் COVID-19 தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் : அதிபர் புட்டின்

வாசிப்புநேரம் -
ரஷ்யாவில் COVID-19 தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் : அதிபர் புட்டின்

(படம்: Dmitri Lovetsky/Pool)

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) COVID-19 தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

COVID-19 தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ள முதல் நாடு ரஷ்யா என்றும் அவர் கூறினார்.

தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தது மாஸ்கோவின் Gamaleya
கல்விக் கழகம் என்றும் அது தமது மகள்களில் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும் அதிபர் புட்டின் குறிப்பிட்டார்.

தடுப்பு மருந்து தொடர்பான அனைத்துப் பாதுகாப்புச் சோதனைகளும் வெற்றிகரமாய் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக மனிதர்களிடம் தடுப்பு மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் ரஷ்ய மக்களுக்குப் பெரிய அளவில் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்