Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்படும் இடங்களிலேயே சந்தேக நபர்கள் சுடப்படலாம்: புட்டின்

ஆயுதம் தாங்கிய சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் அதிகாரிகளால் கொல்லப்படலாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
தென்படும் இடங்களிலேயே சந்தேக நபர்கள் சுடப்படலாம்: புட்டின்

படம்: AFP/Alexey NIKOLSKY

மாஸ்கோ: ஆயுதம் தாங்கிய சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் அதிகாரிகளால் கொல்லப்படலாம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்திருக்கிறார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாதச் செயல் என்று அவர் கூறியுள்ளார்.

அடையாளம் உறுதி செய்யப்படாத வெடிபொருள், பேரங்காடி ஒன்றில் வெடித்தது. அந்தச் சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

ஆயுதம் தாங்கிய சந்தேக நபர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொல்வதற்குத் தாம் அனுமதி வழங்கியதாய்த் திரு புட்டின் கூறினார்.

சிரியா அதிபர் பஷார் அல் அசாத்திற்கு ஆதரவாக அந்நாட்டிற்குத் திரு புட்டின் 2015ஆம் ஆண்டில் ராணுவத்தை அனுப்பியதால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ரஷ்யாவை முக்கிய குறியாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்