Images
  • Qatar Airways
    (படம்: Reuters/Murad Sezer)

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளைக் கொண்ட உலகின் முதல் விமானத்தை இயக்கும் Qatar Airways

தடுப்பூசி போடப்பட்ட விமான ஊழியர்கள், பயணிகளை ஏற்றிச்செல்லும் உலகின் முதல் விமானமாக Qatar Airways திகழ்ந்துள்ளது.

நிறுவனம் அதன் செய்தி அறிக்கையில் அந்தத் தகவல்களை வெளியிட்டது.

அனைத்துலகப் பயணங்களை மீண்டும் தொடங்குவதில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதாக நிறுவனம் கூறியது.

தடுப்பூசி போடப்பட்ட சிப்பந்திகளும் பயணிகளும் QR6421 விமானத்தில்
இன்று காலை 11 மணிக்கு ஹமாத் (Hamad) அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, டோஹாவுக்கு (Doha) 2 மணிக்குத் திரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

பயணப் பதிவு இடத்திலும், தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் பயணிகளுக்கு சேவையாற்றுவர் என்று கூறப்பட்டது.

Qatar Airways, Hamad அனைத்துலக விமான நிலையங்கள்
Skytrax 5 நடசத்திர COVID-19 பாதுகாப்புத் தரநிலைக் குறியீட்டைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துலகப் பயணங்கள் வழக்கநிலைக்குத் திரும்புவதற்கான அடுத்த கட்டம் வெகு தொலைவில் இல்லை என்பதை இன்றைய சிறப்பு விமானம் உணர்த்துவதாக Qatar Airways குழுமத்தின் தலைமை நிர்வாகி, திரு அக்பர் அல் பேக்கர் (Mr. Akbar Al Baker) கூறினார்.

Top