Images
  • qantas
    (படம்: Reuters)

சிக்கலில் மாட்டியிருக்கும் Qantas விமானச் சேவை நிறுவனம்

ஆஸ்திரேலியா: Qantas விமான நிறுவனம் கிருமிப் பரவலைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, போட்டி விமான நிறுவனத்துக்கு எதிராகச் செயல்பட்ட சந்தேகத்தில் சிக்கலில் மாட்டியுள்ளது.

Virgin Australia விமான நிறுவனம் இதனையொட்டி, புகார் செய்ததைத் தொடர்ந்து,ஆஸ்திரேலியாவின் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

Qantas நிறுவனம் Virgin Australia நிறுவனம் பிரச்சினையில் இருப்பதுபோலவும், அது நீடிக்காது என்ற தொனியிலும் கருத்துக்களைத் தெரிவித்துவருவதாக Virgin Australia நிறுவனத்தின் தலைமை நிர்வாகி புகார் அளித்திருந்தார்.

COVID-19 கிருமித்தொற்றால் விமானச் சேவைத் துறை பாதிக்கப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள் இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய அரசாங்கம் சுமார் 420 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஒழுங்கான நிர்வாகம் இல்லாத நிறுவனத்திற்கு அரசாங்கம் உதவக்கூடாது என்று Virgin Australia நிறுவனத்தைக் குறிப்பிட்டு, Qantas நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலென் ஜாய்ஸ் சென்ற வாரம் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்தார்.

அத்துடன், இக்காலக்கட்டத்தில் பலம் வாய்ந்த Qantas போன்ற நிறுவனங்கள் மட்டுமே மீண்டு வரமுடியும் என்றும் அவர் சொன்னார்.

தற்போது, Qantas, Virgin ஆகிய இரு நிறுவனங்களும் தங்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணச் சேவைகளையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. 

Top