Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எலிசபெத் அரசியார் ஏன் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கில் தனியாக அமர்ந்திருந்தார்?

பிரிட்டனில் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றது. 

வாசிப்புநேரம் -
எலிசபெத் அரசியார் ஏன் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கில் தனியாக அமர்ந்திருந்தார்?

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Youtube / Bloomberg

பிரிட்டனில் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு நேற்று இடம்பெற்றது.

செயின்ட் ஜார்ஜ் தேவலாயத்தில் இடம்பெற்ற அதில் எலிசபெத் அரசியார் தனியாக அமர்ந்திருந்தார்.

இளவரசர் ஃபிலிப்பும், அரசியாரும் 73 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள்.

சென்ற ஆண்டு, கிருமித்தொற்று விதிகளின் படி, அரசியாரும் இளவரசர் ஃபிலிப்பும் அரசகுடும்பத்தைச் சேர்ந்த சிலருடன் ஒரு குழுவில் இருந்தனர்.

அவர்கள் மற்ற குழு உறுப்பினர்களுடன் கலக்க முடியாது.

நேற்று மற்ற குழுக்களுடன் அமர முடியாததால், அரசியார் தனியே அமரவேண்டிய சூழல் ஏற்பட்டது.

வழக்கத்துக்கு மாறான அமைதியான விதத்தில் இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இடம்பெற்றது. அதில் 30 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

பிரிட்டனில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளின்படி 30 பேர் மட்டுமே இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளலாம்.

- CNN
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்