Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

92ஆவது பிறந்தநாளைக் கலைநிகழ்ச்சியுடன் கொண்டாடும் எலிசபெத் ராணி

பிரிட்டனின் எலிசபெத் (Elizabeth) ராணி தமது 92வது பிறந்தநாளைக் கலை நிகழ்ச்சியில் கொண்டாட உள்ளார்.

வாசிப்புநேரம் -
92ஆவது பிறந்தநாளைக் கலைநிகழ்ச்சியுடன் கொண்டாடும் எலிசபெத் ராணி

(படம்: Yui Mok/Pool via Reuters)

பிரிட்டனின் எலிசபெத் (Elizabeth) ராணி தமது 92வது பிறந்தநாளைக் கலை நிகழ்ச்சியில் கொண்டாட உள்ளார்.

உலகின் ஆக வயதான, நீண்ட காலம் ஆட்சி புரியும் ராணி என்ற பெருமை திருவாட்டி எலிசபெத்துக்கு உண்டு.

வழக்கமாக ராணி தமது பிறந்தநாளைத் தனிப்பட்ட முறையில் கொண்டாடுவார்.

ஆனால் இம்முறை டாம் ஜோன்ஸ், கைலி மினோக், ஸ்டிங், ஷேகி (Tom Jones, Kylie Minogue, Sting, Shaggy) போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

எலிசெபத் ராணி 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று மத்திய லண்டனில் உள்ள புருடனின் ஸ்டிரீட்டில் (Bruton Street) பிறந்தார்.

ராணியாக பதவியேற்றபோது அவருக்கு வயது 25.

66 ஆண்டுகளாக அவர் லண்டனின் ராணியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்