Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எலிசபெத் அரசியார் COP26 பருவநிலைச் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டார்

பிரிட்டனின் எலிசபெத் அரசியார் COP26 பருவநிலைச் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
எலிசபெத் அரசியார் COP26 பருவநிலைச் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டார்

(கோப்புப் படம்: Alastair Grant/Pool/AFP)

பிரிட்டனின் எலிசபெத் அரசியார் COP26 பருவநிலைச் சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மிகுந்த வருத்தத்துடன் அந்த முடிவை எடுத்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை (Buckingham Palace) தெரிவித்தது.

எனினும், எலிசபெத் அரசியார் பேசி முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று சந்திப்பின்போது ஒளிபரப்பப்படும்.

சென்ற புதன்கிழமை (அக்டோபர் 20), அவருக்கு மருத்துவமனையில் ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதை அடுத்து, சில நாள்களுக்கு ஓய்வெடுக்கும்படி அவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.

இன்று பொதுப்பணிகளை மீண்டும் தொடங்கிய அவர், காணொளி மூலம் சந்திப்புகளில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

பிரிட்டனின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெறவுள்ள COP26 மாநாட்டில், உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய நிகழ்வாக அது கருதப்படுகிறது.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்