Images
  • swan
    (படம்: Pixabay)

பிரிட்டிஷ் அரசியார் கொடுத்த அன்புப் பரிசு...புளோரிடாவில் விற்பனைக்கு...

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் லேக்லந்து (Lakeland) நகரில் உள்ள அன்னப்பறவைகள் பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன.

1957-ஆம் ஆண்டில் 2-ஆம் எலிசபெத் அரசியார் பறவைகளை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

இங்கிலாந்தில் வசித்துவந்த லேக்லந்தைச் சேர்ந்த ஒரு பெண், அன்னப்பறவைகளை அன்பளிப்பாகக் கேட்டு ராணிக்கு எழுதியதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அவருக்கு ஒரு ஜோடி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

ஏன் அன்னப்பறவை? லேக்லந்து நகரின் சின்னமே அன்னப்பறவை தான்.

ஒரு ஜோடி பெருகி, பல ஜோடிகளாக, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் அவை விற்பனைக்கு விடப்பட்டன.

ஒரு பறவை 400 டாலருக்கு விற்கப்படுவதாக BBC கூறியது.

அதிலிருந்து ஈட்டப்படுகின்ற பணம், அவற்றுக்கு உணவு வாங்கப் பயன்படுத்தப்படும்.

அவற்றுக்குப் பிரியாவிடை அளிப்பது கடினமாக இருக்கப்போவதாகப் பறவைகள் வசிக்கும் பூங்காவின் மேலாளர் குறிப்பிட்டார்.  

Top