Images
  • queen
    (படம்: Chris Jackson/Pool via AP)

73ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் எலிஸபெத் அரசியார், இளவரசர் ஃபிலிப்

பிரிட்டிஷ் அரசியாரும் இளவரசர் ஃபிலிப்பும் தங்களுடைய 73ஆவது திருமண நாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

அதற்காக வின்ட்சோர் அரண்மனையில் (Windsor Castle) அமர்ந்திருக்கும் புதிய படம் ஒன்றை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில், இளவரசர் வில்லியமின் 3 பிள்ளைகள் செய்து அன்பளித்த வாழ்த்து அட்டையை அரசியாரும் இளவரசர் ஃபிலிப்பும் பார்வையிடுகின்றனர்.

கடற்படைத் தளபதி லெஃப்டினண்ட் ஃபிலிப் மவுண்ட்பேட்டனை (Philip Mountbatten), எலிஸபெத் தமது 21ஆவது வயதில், 1947ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.

1952 இலிருந்து அவர் பிரிட்டனின் அரசியாகவுள்ளார்.

அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில், பிரிட்டனை ஆக நீண்ட காலம் ஆட்சி செய்தவர் எலிஸபெத் அரசியாரே.

இவ்வளவு ஆண்டு காலம் நீடித்த திருமணமும் அவர்களுடையதே.

99 வயது இளவரசர் ஃபிலிப் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

அரசியார் தமது பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

Top