Images
  • vaccine
    (படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

தடுப்பு மருந்துக்கான ஒதுக்கீட்டுத் திட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இணைந்துகொள்ளும்படிப் பணக்கார நாடுகளுக்கு உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

COVID-19 தடுப்பு மருந்துக்கான ஒதுக்கீட்டுத் திட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் இணைந்துகொள்ளும்படிப் பணக்கார நாடுகளை உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

அதற்கான காலக்கெடு அன்றுடன் முடிவுறுகிறது.

தடுப்பு மருந்துகள் நியாயமாகவும் சிறந்த முறையிலும் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த அது உதவும் என்று நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறினார்.

இதுவரை COVAX திட்டத்தின் மூலம் 92 ஏழை நாடுகள் தடுப்பு மருந்துக்கான உதவிகோரியுள்ளன.

சுமார் 80 பணக்கார நாடுகள் திட்டத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.
ஆனால், அவற்றில் பல திட்டவட்டமாக உறுதிகூறவில்லை.

வசதிகுறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் தடுப்பு மருந்துகளைப் பெறத் தவறினால், நோய்ப்பரவல் தொடர்ந்து உயிர்களைக் கொல்லும்.

உலகளாவிய பொருளியல் மீட்பும் தாமதமாகும் என்று டாக்டர் டெட்ரோஸ் குறிப்பிட்டார். 

Top