Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுட்டெரிக்கும் வெயிலில் புதிய சாதனை

ஐரோப்பாவின் பல இடங்களைச் சுட்டெரிக்கிறது கோடைக்கால வெயில். இந்நிலையில் பிரிட்டனில் ஒரு விசித்திரமான சம்பவம்...

வாசிப்புநேரம் -
சுட்டெரிக்கும் வெயிலில் புதிய சாதனை

(படம்: Wildfowl and Wetlands Trust Facebook)

ஐரோப்பாவின் பல இடங்களைச் சுட்டெரிக்கிறது கோடைக்கால வெயில். இந்நிலையில் பிரிட்டனில் ஒரு விசித்திரமான சம்பவம்...

சூட்டின் காரணமாக 15 ஆண்டுகளில் முதல்முறையாக அரியவகை ஏண்டியன் ஃபிளமிங்கோ நடனநாரையினம் சதுப்பு நிலத்தில் முட்டையிட்டுள்ளது.

அரியவகைப் பறவைகள் அடிக்கடி முட்டையிடுவதில்லை என்றும் கூடுகட்டி வெற்றிகரமாக முட்டையிட பல ஆண்டுகள் ஆகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சதுப்பு நிலத்தில் ஆறு நடனநாரைப் பறவைகள் மொத்தம் 9 முட்டைகளை இட்டு நாட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

பறவைகள் கூடுகட்டுவதற்கு முயன்றுவந்ததாக சதுப்புநிலத்தின் நிர்வாகி கூறினார். ஆனால் அதற்குப் பலன் இதுவரை கிட்டவில்லை.

இறுதியில் சூட்டின் காரணமாக முட்டைகளைப் பறவைகள் இட்டன.

ஆனாலும் புதிய முட்டைகள் குஞ்சு பொரிக்க வாய்ப்பில்லை; இதனால் ஏண்டியன் நடனநாரைகளின் எண்ணிக்கை கூடுவதும் சாத்தியமில்லை என்றார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்