Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இது என்னவென்று ஊகிக்க முடிகிறதா?

ஆஸ்திரேலியாவில் அரிய வகை சுறாமீனின் மிகப் பெரிய பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இது என்னவென்று ஊகிக்க முடிகிறதா?

(படம்: AFP / William WEST)

ஆஸ்திரேலியாவில் அரிய வகை சுறாமீனின் மிகப் பெரிய பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாகச் சுறாமீனுக்கு இருக்கும் பல்லைவிட இந்தப் பல் இரண்டு மடங்கு பெரியதாய் உள்ளது.

கடற்கரையோரம் உலா சென்ற ஃபிலிப் முல்லாலியின் பார்வையில் பட்டது அந்தப் பல்.

ஜான் ஜுக் எனும் பகுதியில் பல தொல்படிமங்கள் (fossils) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மண்ணில் பாதி புதைந்து கிடந்த பல் பளபளவெனத் தோன்றியதாகச் சொன்னார் ஃபிலிப்.

அது மிக முக்கியமானக் கண்டுபிடிப்பாகத் தமக்குத் தோன்றியது என்றும் உடனடியாக அது குறித்து மக்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் ஃபிலிப் நினைத்துள்ளார்.

அரும்பொருளகத்துக்குத் தகவலும் கொடுத்தார் அவர்.

சோதனைகளுக்குப் பிறகு 7 செண்டிமீட்டர் அளவிலான அந்தப் பல் ஒரு வகை சுறாமீனுடையது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியக் கடற்கரைகளில் அவ்வகை சுறாமீன்கள் வாழ்ந்ததாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய மீன்கள் 9 மீட்டருக்கு வளரும் ஆற்றல் கொண்டவை என்றும் குறிப்புகள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியாவில் அத்தகைய பெரிய பல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

அந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு ஆய்வாளர்களும் தொண்டூழியர்களும் அதே பகுதிக்கு இரு முறை சென்றுவிட்டனர்.

நாற்பதுக்கும் மேற்பட்ட பற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை பெரும்பாலும் பெரிய சுறாமீன்களின் பற்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்