Images
  • ballet dancers

எலியால் கிலியான நடனமணிகள்

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரின் அரங்கொன்றில் அருமையான பாலே (Ballet) நடனப் படைப்பு.

'Sleeping Beauty' கதையை ஆஸ்திரேலிய பாலே நடனமணிகள் 2,000 ரசிகர்கள் முன்னிலையில் அற்புதமாகப் படைத்துக்கொண்டிருந்தனர்.

திடீரென அரங்கம் இருட்டில் மூழ்கியது. அதிர்ந்துபோன நடனமணிகள் செய்வதறியாது திகைத்தனர்.

பார்வையாளர்களோ அது கலைப் படைப்பின் அங்கம் என்று நினைத்து ஒளிக்கீற்றுக்காகக் காத்திருந்தனர்.

சற்று நேரத்திற்குப் பிறகு, ஏற்பாட்டாளர்கள் வந்தனர்; டார்ச் விளக்குக் கொண்டு அரங்கத்திலிருந்து அனைவரையும் வெளியேற்றினர்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம், கோபம். என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள ஆவல்.

காரணம் பின்னர் தெரியவந்தது; பலரை ஆச்சர்யப்படுத்தியது. எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம் ஓர் எலி.

எலி என்ன செய்தது?

11,000 வோல்ட் கொண்ட கருவி ஒன்றுக்குள் புகுந்து அதிலிருந்த இணைப்புக் கம்பியைக் கடித்துக் குதறியிருக்கிறது.

அது மின்சாரத்தைத் துண்டித்துவிட்டது.

அடிலெய்ட் நகரில் நடந்த மற்றொரு நடனப் படைப்பு அரங்கத்திலும் இதனால் குளறுபடி.

பார்வையாளர்களுக்குப் பணத்தைத் தர ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஆனால் எலியை கண்டுபிடிக்கமுடிந்ததா? இல்லை! அது வேலையை முடித்துவிட்டு அடுத்த இடம் தேடி கிளம்பிவிட்டது.

 

உங்கள் கருத்து

Top