Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 பரவல் இவ்வாண்டை உலகப் பொருளியல் மந்தநிலைக்கு இட்டுச் செல்லும்: அனைத்துலகப் பண நிதியம்

COVID -19 கிருமிப்பரவல் இவ்வாண்டை உலகப் பொருளியல் மந்தநிலைக்கு இட்டுச் செல்லும் என்று அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 பரவல் இவ்வாண்டை உலகப் பொருளியல் மந்தநிலைக்கு இட்டுச் செல்லும்: அனைத்துலகப் பண நிதியம்

(படம்: REUTERS/Remo Casilli/File Photo

COVID -19 கிருமிப்பரவல் இவ்வாண்டை உலகப் பொருளியல் மந்தநிலைக்கு இட்டுச் செல்லும் என்று அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது.

அது 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியைவிட மோசமாக இருக்கும் என்று நிதியம் எச்சரித்தது. இருப்பினும் அடுத்த ஆண்டு உலகப் பொருளியல் மீண்டுவரும் என்றும் அது கூறியது.

சுகாதார முறைகளை மேம்படுத்த நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிதித் திட்டங்களை வகுத்து வருவதை நிதியம் பாராட்டியது. குறிப்பாக, பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களையும் ஊழியர்களையும் பாதுகாக்க அரசாங்கங்கள் எடுத்துவரும் முயற்சிகளை நிதியம் மெச்சியது.

மக்களைப் பாதுகாக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும். பொருளியல் பாதிப்பைக் குறைக்க வேண்டும். 

என்று அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் முடக்க நடவடிக்கைகளை அறிவித்து வருகின்றன. உலகம் எங்கும் கிருமித்தொற்றுக்கு இதுவரை 337,500 பேர் ஆளாகியுள்ளனர்.

கிருமித்தொற்றால் இதுவரை 14,600 பேர் மாண்டனர்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்