Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் உலகெங்கும் சுமார் 308,000 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவு

உலக சுகாதார நிறுவனம், நாள் ஒன்றுக்கு பதிவாகிவரும் கொரோனா கிருமிப்பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் உலகெங்கும் சுமார் 308,000 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவு

(படம்: REUTERS/Niharika Kulkarni)

உலக சுகாதார நிறுவனம், நாள் ஒன்றுக்கு பதிவாகிவரும் கொரோனா கிருமிப்பரவல் சம்பவங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 307,930 என பதிவானது.

கிருமித்தொற்றுக்கு மேலும் 5, 500 பேர் பலியாகினர்.

Johns Hopkins பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதைத் தெரிவிக்கின்றன.

உலக அளவில் 29 மில்லியனுக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் ஆக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா கிருமித்தொற்றுக்கு 920,000க்கும் அதிகமானோர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்