Images
  • recycle students (1)
    (படம்:AFP Photo/PRAKASH MATHEMA)

சாக்கடலைப் போன்ற வரைபடம்; பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு...எங்கே?

கடலை அதிகம் மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் நேப்பாளத்தைச் சேர்ந்த மாணவர்கள் இறங்கியுள்ளனர்.

சாக்கடலின் (Dead Sea) வரைபடத்தைப் பிளாஸ்டிக் பைகளால் உருவாக்கி அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவினர்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 100,000 வண்ண பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு அவர்கள் சாக்கடலின் வரைபடத்தை உருவாக்கினர்.
அது 20 மீட்டர் நீளமும் 5 மீட்டர் உயரமும் உடையது.

தலைநகர் காட்மாண்டுவில் வரைபடத்தை உருவாக்க 150க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் திரண்டனர்.

முயற்சியைக் கின்னஸ் உலகச் சாதனையாகப் பதிவு செய்யவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Top