Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செய்தி இல்லாத செய்தித்தாள்கள்: அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆஸ்திரேலிய நாளிதழ்கள்

ஆஸ்திரேலியாவின் நாளிதழ்களில் பல, இன்று தலைப்புச் செய்திகள் அகற்றப்பட்ட முதல் பக்கங்களை வெளியிட்டன.

வாசிப்புநேரம் -
செய்தி இல்லாத செய்தித்தாள்கள்: அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆஸ்திரேலிய நாளிதழ்கள்

(படம்: AFP)

ஆஸ்திரேலியாவின் நாளிதழ்களில் பல, இன்று தலைப்புச் செய்திகள் அகற்றப்பட்ட முதல் பக்கங்களை வெளியிட்டன.

ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து நாளிதழ்கள் அவ்வாறு செய்தன.

அரசாங்கம் மக்களிடமிருந்து என்னென்ன ரகசியங்களை மறைத்துள்ளது என்ற கேள்வியைக் கேட்கும் விளம்பரங்களும் அந்நாட்டின் ஒளிவழிகளில் காட்டப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் ABC ஒளிவழி அலுவலகங்களையும், News Corp செய்தியாளரின் வீட்டையும் காவல்துறை சோதனையிட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கு எதிரான Right to Know ஊடகச் சுதந்திரக் கூட்டணியின் பிரசாரங்கள் தொடங்கியுள்ளன.

காவல்துறையின் சோதனைகளைத் தொடர்ந்து மூன்று செய்தியாளர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஊடகச் சுதந்திரத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார், எனினும் செய்தியாளர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு நாடளுமன்றத்தில் ஊடகச் சுதந்திரம் குறித்த விசாரணைக் குழு அதன் கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்