Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: Regeneron COVID-19 நோய் எதிர்ப்பு சிகிச்சையைப் பயன்படுத்த அவசர அனுமதி

அமெரிக்க உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், Regeneron மருந்தாக்க நிறுவனத்தின் சோதனைநிலை COVID-19 நோய் எதிர்ப்பு சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கான அவசர அனுமதியை வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: Regeneron COVID-19 நோய் எதிர்ப்பு சிகிச்சையைப் பயன்படுத்த அவசர அனுமதி

(கோப்புப் படம்: REUTERS/Brendan McDermid)

அமெரிக்க உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், Regeneron மருந்தாக்க நிறுவனத்தின் சோதனைநிலை COVID-19 நோய் எதிர்ப்பு சிகிச்சையைப் பயன்படுத்துவதற்கான அவசர அனுமதியை வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு அந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மிதமான கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அந்தச் சிகிச்சையை அளிக்கலாம் என ஆணையம் தெரிவித்தது.

65 வயதுக்கும் மேற்பட்டவர்களும், நாட்பட்ட நோயால் அவதியுறும் நோயாளிகளும் Regeneron சிகிச்சையைப் பெறமுடியும்.

ஆனால், COVID-19 நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அந்தச் சிகிச்சையை அளிக்க அனுமதியில்லை என ஆணையம் கூறியது.

கிருமித்தொற்றுக்காக உயிர்வாயு சிகிச்சை பெறுவோரும் Regeneron சிகிச்சையைப் பெறமுடியாது.

அந்த நோய் எதிர்ப்பு சிகிச்சை, மருத்துவமனையில் உள்ள COVID-19 நோயாளிகளின் உடல்நிலையை எந்தவிதத்திலும் மேம்படுத்தவில்லை எனச் சோதனைகளில் தெரியவந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்