Images
  • carbon emission
    (படம்: Pixabay)

கிருமிப்பரவலில் இருந்து மீள எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அதிகரித்துள்ள உலகளாவிய கரியமில வாயு வெளியேற்றம்

உலகளவில், கிருமிப்பரவல் சூழலிலிருந்து பொருளியல் ரீதியாக மீள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளால் கரியமில வாயு வெளியேற்றம் 2023ஆம் ஆண்டில் முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகரிக்கும் என்று ஆய்வொன்று தெரியப்படுத்தியுள்ளது.

உலக நாடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அதன் மூலம், கரியமில வாயு வெளியேற்றத்தை 2050ஆம் ஆண்டுக்குள் முழுமையாக நிறுத்தலாம் என்று ஆய்வு நடத்திய International Energy Agency என்னும் அனைத்துலக எரிசக்தி அமைப்பு சுட்டியது.

ஆனால் அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான அளவை விட 2023இல் சுமார் 3.5 பில்லியன் டன் கூடுதல் கரியமிலவாயு காற்றில் கலக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.  

Top