Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தேம்ஸ் நதியில் சிக்கியிருந்த திமிங்கிலம் மீட்கப்பட்டுள்ளது

மீட்புப்படையினர் இரவுமுழுவதும் அயராது பாடுபட்டு திமிங்கிலத்தைக் காப்பாற்றியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 

வாசிப்புநேரம் -
தேம்ஸ் நதியில் சிக்கியிருந்த திமிங்கிலம் மீட்கப்பட்டுள்ளது

(படம்:@dkfitldn/Twitter via Reuters)

தென்மேற்கு லண்டனின் தேம்ஸ் (Thames) நதியில் சிக்கியிருந்த திமிங்கிலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்புப்படையினர் இரவுமுழுவதும் அயராது பாடுபட்டு திமிங்கிலத்தைக் காப்பாற்றியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

திமிங்கிலம் ஞாயிற்றுக்கிழமை மாலையில் முதலில் கண்ணில் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்புக்குழு அதனை மீட்கும் காட்சிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் காணொளியில் இடம்பெற்றன.

Minke வகையைச் சேர்ந்த அந்தத் திமிங்கிலத்தின் ஆரோக்கியத்தை உறுதிசெய்த பிறகு அது விடுவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

- REUTERS 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்