Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகத்தைச் சுற்றி, சந்திரனை உருவாக்கக்கூடிய வளையம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகத்தைச் சுற்றி, வாயு, தூசியால் ஆன வளையத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகத்தைச் சுற்றி, வாயு, தூசியால் ஆன வளையத்தை விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரகங்களும் சந்திரன்களும் எவ்வாறு உருவாகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள அது உதவும் என்று ஒரு ஆய்வு சுட்டியது.

PDS 70c என்று அழைக்கப்படும் கிரகத்தைச் சுற்றி வளையம் அமைந்துள்ளது.

வியாழன் கிரகத்தைப் போல கிரகத்தின் அளவு இருக்கிறது.

PDS 70 எனும் நட்சத்திரத்தை அது சுற்றி வருகிறது.

European Southern வானியல் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் PDS 70c-ஐ 2019-இல் கண்டுபிடித்தனர்.

PDS 70c கிரகத்தைச் சுற்றி சந்திரன்களை உருவாக்கக்கூடிய வளையம் உள்ளதாக The Astrophysical Journal Letters ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டது.

ALMA தொலைநோக்கி மூலம் வளையம் கிரகத்தைச் சுற்றி வருவதைத் தெளிவாகக் காண முடிகிறது என்று கூறப்பட்டது.


-AFP/ec 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்