Images
  • rex tillerson
    (படம்:AFP/Jonathan Ernst)

வெளியுறவு அமைச்சரை வெளியேற்றினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டிலர்சனைப் (Rex Tillerson) பதவி நீக்கம் செய்துள்ளார். மத்திய வேவு துறை இயக்குநர் மைக் போம்பியோ (Mike Pompeo) அந்தப் பொறுப்பில் அமர்த்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமது புதிய வெளியுறவு அமைச்சராக மைக் போம்பியோ பதவியேற்பார். அவர் சிறந்த வகையில் பதவியாற்றுவார்.

என்று திரு டிரம்ப் தமது சமூக வலைப்பதிவில் தெரிவித்தார்.

ரெக்ஸ் டிலர்சன் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்து கொண்டார் திரு டிரம்ப்.

Donald J. Trump on Twitter

Mike Pompeo, Director of the CIA, will become our new Secretary of State. He will do a fantastic job! Thank you to Rex Tillerson for his service! Gina Haspel will become the new Director of the CIA, and the first woman so chosen. Congratulations to all!


மத்திய வேவுத்துறை இயக்குநர் பொறுப்பை திருவாட்டி கினா ஹாஸ்பெல் ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண்ணாகவும் அவர் இருப்பார்.


 

Top