Images
  • Tex Tillerson
    (படம்: Yonhap via REUTERS)

வட கொரியாவுடன் நேரடிப் பேச்சு நடத்துவதற்கான காலம் கனியவில்லை: ரெக்ஸ் டிலர்சன்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டிலர்சன் (Rex Tillerson) வட கொரியாவுடன் நேரடிப் பேச்சு நடத்துவதற்கான காலம் கனியவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு முன் அமெரிக்கா வட கொரியாவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் (Mike Pence) கூறியிருந்தார்.

எதிர்காலத்தில் வட கொரியாவுடன் அரசதந்திர உறவுகளை வைத்துக்கொள்ள அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒப்புக்கொண்டதாக திரு பென்ஸை மேற்கோள்காட்டி வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) செய்தி வெளியிட்டிருந்தது.

அதேவேளை பியோங்யாங் அணுவாயுதப் பெருக்க நடவடிக்கைகளை கைவிடாதவரை அதற்கு எதிராக அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் கடும் தடைகளை விதிக்கும் என்றும் திரு பென்ஸ் கூறினார்.

பியோங்யாங்கிற்கு எதிரான கடும் போக்கு தொடரும் அதேவேளையில்
வெள்ளை மாளிகை அதனுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் திரு பென்ஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆக்ககரமான முறையில் வட கொரியா அமெரிக்காவுடன் செயல்பட விரும்புகிறதா என்பதை அதுதான் முடிவு செய்யவேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டிலர்சன் கூறியுள்ளார்.

ஆனாலும் வட கொரியா அதன் அணுவாயுத நடவடிக்கைகளைக் கைவிடாவரை அது பொருளியல், அரசதந்திர ரீதியாகத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்படவேண்டும் என்று துணையதிபர் பென்ஸ் தெரிவித்துள்ளார்.




 

Top