Images
  • Macua

உலகின் ஆகப் பணக்கார நகரங்கள் பட்டியலில், 2020க்குள் மக்காவ் முதலிடம் பிடிக்குமா?

உலகப் பணக்கார நகரங்களின் வரிசையில் 2020ஆம் ஆண்டுக்குள் மக்காவ் முதலிடம் பிடிக்கும் என அனைத்துலகப் பணநிதியம் முன்னுரைத்துள்ளது.

கத்தாரைப் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை மக்காவ் பிடிக்கக் கூடும்.

சூதாட்டக் கூடங்களுக்கு பெயர்பெற்ற மக்காவ் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபரின் பங்கு 2020ஆம் ஆண்டுக்குள் $143,116 ஆக உயரலாம்.

அதே நேரத்தில் தற்போது முதலிடத்தில் இருக்கும் கத்தாரில் அது $139,151 ஆக இருக்கலாம்.

2023ஆம் ஆண்டில் அது சிங்கப்பூரில் $117, 535 ஆக வளரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அனைத்துலகப் பண நிதியம் முன்னுரைத்தது.

சீனாவில், சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற சூதாட்டக் கூடம் அமைந்துள்ள ஒரே நகரம் மக்காவ் மட்டுமே ! 

Top