Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை அளவுக்கு அதிகமாகக் கையிருப்பில் வைத்துக்கொள்கின்றன - குறைகூறும் ஐக்கிய நாட்டு நிறுவனம்

பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை அளவுக்கு அதிகமாகக் கையிருப்பில்  வைத்துக்கொள்வதாக, ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) குறைகூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை அளவுக்கு அதிகமாகக் கையிருப்பில் வைத்துக்கொள்வதாக, ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அந்தோனியோ குட்டெரஸ் (Antonio Guterres) குறைகூறியுள்ளார்.

நோய்ப்பரவலை முடிவுக்குக் கொண்டுவர, பணக்கார நாடுகள் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

உலக அளவில் சமமான முறையில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படாதது கவலையளிப்பதாகத் திரு குட்டெரஸ் கூறினார்.

நியாயமான முறையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தடுப்பூசிகள் உண்மையான உலகளாவிய பொது நலனாகக் கருதப்படுவேண்டும் என்றும் அவர் கூறினார்.

பணக்கார நாடுகள், தேவைக்கு அதிகமான தடுப்பூசிகளை ஒதுக்கி வைத்துக்கொள்ளும் சுயநலத்தைத் திரு குட்டெரஸ் கண்டித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்