Images
  • accident
    படம்: AFP

சாலை விபத்துகளால் ஆண்டுக்கு 1.35 மில்லியன் பேர் இறக்கின்றனர்: உலகச் சுகாதார நிறுவனம்

சாலை விபத்துகளால் ஒவ்வொரு 24 நொடிக்கும் ஒருவர் பலியாவதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

அதனால் ஆண்டிற்கு 1.35 மில்லியன் பேர் இறப்பதாக அது குறிப்பிட்டது.

கடந்த 3 ஆண்டுகளில், இறப்போர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100,000 கூடியது.

விபத்துகளில் இறப்பவர்களில் பெரும்பாலானோர் 5 வயதிலிருந்து 29 வயதிற்குட்பட்டவர்கள் என்று உலகச் சுகாதார நிறுவனம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

2013 ஆம் ஆண்டுத் தகவலின்படி ஆண்டிற்கு 1.25 மில்லியன் பேர் சாலை விபத்துகளால் இறந்தனர்.

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதும், வேகமாக வாகனங்களைச் செலுத்துவதும், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவதும் விபத்துகளுக்குக் காரணங்களாக இருக்கின்றன.

உலகில் நடக்கும் மோட்டர்சைக்கிள் விபத்துகளால் மடிவோரில்
43 விழுக்காட்டினர் தென்கிழக்காசியாவைச் சேர்ந்தவர்கள். 

Top