Images
  • rocket malfunction
    (படம்: REUTERS/Shamil Zhumatov)

நடுவானில் செயலிழந்த உந்துகணை - விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

அனைத்துலக விண்வெளி நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சோயுஸ் உந்துகணை, நடுவானில் செயலிழந்தது.

அதனால், இரண்டு விண்வெளி வீரர்கள் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

உந்துகணையில் பயணம் செய்த ரஷ்ய விண்வெளி வீரரும் அமெரிக்க விண்வெளி வீரரும் பாதுகாப்பாக இருப்பதாக ரஷ்யச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

உந்துகணை தொடக்கத்தில் அது சுமுகமாகச் சென்றதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபர் கூறியுள்ளார்.

அதனால், ஆக உயரத்தில் சென்றபோது அது செயலிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.  

Top