Images
  • Rollercoaster
    (படம்:LADYINRED10800/ Twitter)

இங்கிலாந்து ரோலர் கோஸ்டர் கோளாறு - 15 மீட்டர் உயரத்தில் தொங்கிய வருகையாளர்கள்


இங்கிலாந்து: Gulliver's World கேளிக்கைப் பூங்காவின் ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட கோளாற்றினால் சிறுவர்கள் உட்பட 21 பேர் 15 மீட்டர் உயரத்தில் சிக்கிக்கொண்டனர்.

ஏணிகள், சாரக்கட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தித் தீயணைப்புக் குழு அனைவரையும் மீட்டது.

வாரிங்டன் (Warrington) நகரில் இருக்கும் கேளிக்கைப் பூங்காவில் நடந்த இச்சம்பவம் குறித்துப் பிற்பகல் 1.10 மணிக்குத் தீயணைப்புக் குழு தகவல் பெற்றது.

மீட்புப் பணிகள் சுமார் 2 மணி நேரம் நீடித்தன.

ரோலர் கோஸ்டர் வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் திடீரென்று கழன்றதாகவும், பின் அது நகராமல் நின்றதாகவும் சிக்கிக்கொண்ட சிறுமியின் தாயார் கூறினார்.

பயத்தில் பிள்ளைகள் அலற ஊழியர்கள் சுமார் 20 நிமிடங்கள் செய்வதறியாது திகைத்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கேளிக்கைப் பூங்கா நிர்வாகம் சம்பவம் பற்றி இதுவரை கருத்துரைக்கவில்லை. 

Top