Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரோம்: நிரம்பி வழியும் குப்பை, அதிகரித்துவரும் சுகாதாரக் கவலை

தெருநெடுக வீசப்பட்ட உணவுப் பொருள் பொட்டலங்கள்... இதனால் அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கை...

வாசிப்புநேரம் -
ரோம்: நிரம்பி வழியும் குப்பை, அதிகரித்துவரும் சுகாதாரக் கவலை

(படம்: AFP/Tiziana Fabi)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இத்தாலி: தெருநெடுக வீசப்பட்ட உணவுப் பொருள் பொட்டலங்கள்...

இதனால் அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கை...

சிலவேளைகளில் காட்டுப் பன்றிகள்கூட சாலைகளில் திரிகின்றன.

ரோமில் (Rome) அதிகரித்துவரும் குப்பைக் கூளங்களால் அந்நகர மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரத்தின் தலைமை மருத்துவர் நிலைமை மோசமடைந்தால் அது 'சுகாதார எச்சரிக்கையாக' மாற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அழுகிவரும் குப்பையால் ஈர்க்கப்படும் பூச்சிகள், விலங்குகள்மூலம் நோய்கள் பரவக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மருத்துவரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கழிவை அப்புறப்படுத்துவதற்காக ரோமில் கடைப்பிடிக்கப்படும் வழிகள்குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர் வழக்குரைஞர்கள்.

சினமடைந்துள்ள பொதுமக்கள் எந்தக் குப்பைத்தொட்டி ஆக அசுத்தமாகவுள்ளது என்று போட்டி நடத்தத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் நிரம்பிவழியும் குப்பையை அப்புறப்படுத்துவதற்குப் போதிய கட்டமைப்பு ரோமில் இல்லை.

அங்குள்ள மூன்று குப்பை நிரப்பும் நிலங்களில் ஒன்று மூடப்பட்டுள்ளது.

மற்ற இரண்டிலும் அண்மைக் காலத்தில் தீச்சம்பவங்கள் நேர்ந்தன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்