Images
  • rooster
    (படம்: Pixabay)

ஆஸ்திரேலியா: சேவல் கொத்தி மூதாட்டி மரணம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஆஸ்திரேலியாவில் சேவல் கொத்தியதால் 76 வயது மூதாட்டி மாண்டார். 

Forensic Science, Medicine and Pathology எனும் அறிவியல் சஞ்சிகையில் அது குறித்து தெரிவிக்கப்பட்டது.

CNN தகவல்படி, வீட்டில் வளர்த்துவரப்பட்ட அந்தச் சேவல் மூதாட்டியின் இடது காலைக் கொத்தியதில் அவருடைய இரத்தக்குழாயில் கசிவு ஏற்பட்டது.

மூதாட்டிக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வீங்கிய இரத்தக்குழாய் போன்ற பிரச்சினைகள் இருந்ததால் சேவல் கொத்தியது அவரைப் பெரிதும் பாதித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

Top