Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி திருமணத்தில் புதிய குழப்பம்

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த அரச திருமணத்தில் தற்போது ஒரு புதிய குழப்பம் வெடித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் இளவரசர் ஹேரியும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலும் இம்மாதம் 19ஆம் தேதி மணம் முடிக்கவிருக்கிறார்கள்.

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அந்த அரச திருமணத்தில் தற்போது ஒரு புதிய குழப்பம் வெடித்துள்ளது.

மணப்பெண்ணான மேகன் மார்க்கலின் தந்தை தாமஸ் மேகன் திருமணத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

திரு. தாமஸுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதுவே அவர் திருமணத்தில் கலந்து கொள்ளாததற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த முடிவு அரச குடும்பத்தையும், தமது மகள் மேகனையும் சங்கடப்படுத்தும் நோக்கம் கொண்டது அல்ல என்றார் திரு. தாமஸ்.

திருமணத்தில் மணப்பெண் மேகனுக்குத் துணையாக அவரது தாயார் இருப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்