Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

4 மணி நேரத்தில் ஒரு மில்லியன் Instagram ரசிகர்களைப் பெற்று சாதனை படைத்த பிரபலம்

Instagram தளத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களைக் குறைவான நேரத்தில் பெற்ற சாதனையை முறியடித்துள்ளார், Harry Potter திரைப்படத் தொடரில் நடித்த ரூப்பர்ட் கிரின்ட் (Rupert Grint).

வாசிப்புநேரம் -
4 மணி நேரத்தில் ஒரு மில்லியன் Instagram ரசிகர்களைப் பெற்று சாதனை படைத்த பிரபலம்

(படம்: AFP / Angela Weiss)

Instagram தளத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களைக் குறைவான நேரத்தில் பெற்ற சாதனையை முறியடித்துள்ளார், Harry Potter திரைப்படத் தொடரில் நடித்த ரூப்பர்ட் கிரின்ட் (Rupert Grint).

தொடரில், Ron Weasley என்ற கதாபாத்திரத்தைச் சித்திரித்துப் பிரபலமடைந்த கிரின்ட் ரசிகர்களைப் பெற எடுத்துக்கொண்ட நேரம் 4 மணி நேரம் ஒரு நிமிடம்.

இதற்கு முன்னர் அதே சாதனை படைத்த சர் டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough ) எனும் இயற்கை ஆர்வலர், ரசிகர்களைப் பெற எடுத்துக்கொண்ட நேரம் 4 மணி நேரம் 44 நிமிடங்கள்.

அந்தத் தகவல் கின்னஸ் (Guinness) உலக சாதனை இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்டது.

தம்முடைய குழந்தையுடன் எடுத்த படத்தைப் பகிர்ந்துக்கொண்ட கிரின்ட், தாம் Instagram கணக்கைத் தொடங்குவதற்கு 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதை வேடிக்கையாகக் குறிப்பிட்டிருந்தார்.

Instagram தளம் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்