Images
  • Russia pm
    படம்: REUTERS

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ரஷ்யப் பிரதமர் மீண்டும் பணிக்குத் திரும்பினார்

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ரஷ்யப் பிரதமர் மிக்கெய்ல் மிஸ்ஹஸ்டின் (Mikhail Mishustin) மீண்டும் பணிக்குத் திரும்பினார்

ரஷ்யாவில் இன்று COVID-19 கிருமித்தொற்றால் 150 பேர் மரணமடைந்தனர்.

அங்கு ஒரே நாளில் ஆக அதிகமாக மரணச் சம்பவங்கள் பதிவானது இன்றுதான்.

இருப்பினும் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மூன்றாவது நாளாக 9,000-க்குக் கீழ் பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 8,894 பேருக்கு புதிதாக கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவிற்கு அடுத்து அதிக அளவில் கிருமித்தொற்று பதிவான நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

இதுவரை ரஷ்யாவில் 326,448 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 3,249 பேர் மாண்டனர்.

7,144 பேர் உடல் நலம் தேறினர். மொத்தத்தில், 99,825 பேருக்கு கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் அகன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது ரஷ்யாவில் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.  

Top