Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மேற்கு பசிபிக் வட்டாரத்தில் சீனாவும் ரஷ்யாவும் முதன்முறையாகக் கடற்புறச் சுற்றுக்காவல் கூட்டுப் பயிற்சி

மேற்கு பசிபிக் வட்டாரத்தில் சீனாவும் ரஷ்யாவும் முதன்முறையாகக் கடற்புறச் சுற்றுக்காவல் பயிற்சியை கூட்டாக நடத்தியுள்ளன.

வாசிப்புநேரம் -

மேற்கு பசிபிக் வட்டாரத்தில் சீனாவும் ரஷ்யாவும் முதன்முறையாகக் கடற்புறச் சுற்றுக்காவல் பயிற்சியை கூட்டாக நடத்தியுள்ளன.

ரஷ்யாவின் பத்துக் கப்பல்களும் சீனாவின் ஐந்து கப்பல்களும் அதில் பங்கேற்றன.

வடக்கே உள்ள Tsugaru நீரிணையில் நடத்தப்பட்ட பயிற்சியை ஜப்பான் அணுக்கமாகக் கண்காணித்தது.

இரு நாடுகளின் பொருளியல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் நடைமுறையைப் பயிற்சி பறைசாற்றியதாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு கூறியது.

ஆசிய பசிபிக் வட்டாரத்தின் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநிறுத்தும் வகையிலும் பயிற்சி அமைந்ததாக அது சொன்னது.

அமெரிக்காவுடனும் மேற்கத்திய நாடுகளுடனும் உறவு கசந்து வரும் சூழலில் சீனாவும் ரஷ்யாவும் ராணுவ, அரசதந்திர உறவை வலுப்படுத்துகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்