Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

20 டாலருக்கும் குறைவாக கொரோனா தடுப்பூசியை விற்க திட்டமிடும் ரஷ்யா

Sputnik Five கொரோனா தடுப்பூசி மற்ற அனைத்து தடுப்பு மருந்துகளையும் விட செயல்திறன் மிக்கது. அவற்றை விடப் பாதி விலையில் கிடைக்கக்கூடியது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
20 டாலருக்கும் குறைவாக கொரோனா தடுப்பூசியை விற்க திட்டமிடும் ரஷ்யா

(படம்: AFP)

Sputnik Five கொரோனா தடுப்பூசி மற்ற அனைத்து தடுப்பு மருந்துகளையும் விட செயல்திறன் மிக்கது. அவற்றை விடப் பாதி விலையில் கிடைக்கக்கூடியது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இரண்டு முறை கொடுக்கப்படவேண்டிய
Sputnik Five தடுப்பூசி 95 விழுக்காடு செயல்திறன் கொண்டது என்று அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. என்றாலும், ரஷ்யத் தடுப்பூசி குறித்து அது எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை.

20 டாலருக்கும் குறைவான விலையில் ஒருவருக்கான தடுப்பூசியை அனைத்துலகச் சந்தையில் வழங்க முடியும் என்று அதிகாரிகள் கூறினர். ரஷ்யக் குடிமக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். முன்னோட்டப்
பரிசோதனைகளில் இதுவரை பக்கவிளைவுகள் ஏதும் கண்டறியப்படவில்லை.

வரும் ஜனவரியில் Sputnik Five தடுப்பூசியை அனைத்துலகச் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்